Friday, March 4, 2011

ஸ்ரேயாவின் 'கண்களைத் திறந்த' பார்வையற்ற தம்பதி!


நடிப்பை பகுதி நேர வேலையாக்கிவிட்டு, ஸ்ரேயா ஆன்மீகம், சமூக சேவை பணிகளில் முழுமையான ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார் ஸ்ரேயா.

வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஜக்கிதான் இவரது சமூக - ஆன்மீக குரு. தினமும் யோகா, தியானத்தில் சில மணி நேரங்களைச் செலவிடும் ஸ்ரேயா, ஏழைகளுக்கு உதவிகளும் செய்கிறாராம்.

தனது இந்த மாற்றம் ஏற்பட்டது குறித்து ஸ்ரேயா இப்படிச் சொல்கிறார்: "சில நாட்களுக்கு முன் பார்வையற்ற கணவன்-மனைவியை பார்த்தேன்.

இருவரும் ஒருவருக்கொருவர் ரொம்ப பாசமாக இருந்தார்கள். அதோடு பிறருக்கு உதவிகளும் செய்து வந்தனர். அவர்களின் நடவடிக்கைகள் என் கண்களை திறந்தன. பார்வையற்ற தம்பதிகளே மற்றவர்களுக்கு இந்த அளவு உதவும் போது, கை, கால், கண் எல்லாம் சரியாக இருக்கும் நாம் ஏன் உதவிகள் செய்யக்கூடாது என்ற எண்ணம் என் மனதை மாற்றிவிட்டது.

அதன் பிறகு நானும் இப்போது முழு நேர சமூக சேவகியாக மாறிவிட்டேனேன். ஒரு அமைப்பு துவங்கி அதன் மூலம் பார்வையற்றோருக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது.

பார்வையற்ற தம்பதியை சந்தித்ததில் இருந்து அழகு பற்றி யோசிப்பதை விட்டு விட்டேன். மனசுதான் உண்மையான அழகு என்பதையும் புரிந்து கொண்டேன்...", என்றார்.

No comments: