Thursday, March 3, 2011

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்

சென்னை: காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் அனுமார் வால் போல நீண்டு கொண்டிருக்கும் நிலையில் வருகிற 5ம்தேதி உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளது திமுக.

மிக முக்கிய முடிவுகளை எடுக்கும்போதுதான் இந்தக் கூட்டத்தை திமுக கூட்டுவது வழக்கம். எனவே காங்கிரஸ் தொடர்பாக முக்கிய முடிவு எதுவும் இதில் எடுக்கப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், 5ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இதில் சட்டசபைத் தேர்தல், திமுக தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக என்று எதையும் அவர் கூறவில்லை.

இந்த கூட்ட அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக இறுதிக் கெடு என்றும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

-----------

அணிகள் மா(நா)றலாம் என பேச்சுக்கள் கசிய தொடங்க்யுள்ளது.

No comments: