Tuesday, March 15, 2011

விடுதலைப்புலி ஆதரவு பிரசாரம் குற்றம் ஆகாது; ஐகோர்ட்டு அபார தீர்ப்பு

கருத்துரிமை இயக்கம் சார்பில் புகழேந்தி தங்கராஜ் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் கமிஷனர் அனுமதி தர மறுத்து விட்டார்.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது:-

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரசாரம் செய்வதோ குற்றம் ஆகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. எனவே விடுதலைப்புலிகளின் தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல. அரசியல் சட்டத்துக்கு எதிரானது அல்ல. இதனால் கமிஷனர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

7 அணு உலைகள் நிறுத்தம்: ஜெர்மனி அதிரடி

ஜப்பானில் நில நடுக்கம், சுனாமியால் நிலை குலைந்துள்ளது அதில் அணு உலைகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது. 3 அணு உலைகள் வெடித்ததில் அணு உலைகள் செயலிழந்து அணுக்கதிர் வீச்சு அதிகரித்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து 7 அணு உலைகளின் செயல் பாட்டினை 3 மாதங்களுக்கு நிறுத்துவதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. தலைநகர்  பெர்னிலின் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெர்மனி  அதிபர் ஏன்ஜலா மார்க்கல் ஜெர்மனியில் தற்போது இயங்கி வரும் 17 அணு மின் உலைகளில்,1980 க்கு  முன்னர் செயல்படத்தொடங்கிய அணு மின் உலைகள் 7 தற்காலியமாக நிறுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டிற்குள் அணு உலைகளை அணைத்தையும் நிறுத்த வேண்டும் என்று ஜெர்மனியின் முந்தைய அரசு முடிவு செய்தது.   ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அம் முடிவு மாற்றப்பட்டது. இப்பொழுது ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணுக்கதிர் வீச்சு ஜெர்மனியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து ஜெர்மனியின் மாகான அரசுகளுடன்  பேசிய மார்க்கல் 7 உலைகள் அடுத்து 3 மாதத்திற்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சி அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு

சென்னை: வரும் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் இக்கட்சியின் அகில இந்திய தலைவர் எஸ்.எம்.பாக்கர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட வக்ப் நிலங்கள் மீட்கப்பட்டு, ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும். ஜமாஅத் மூலம் செய்யப்படும் திருமண பதிவு, சட்டப் பதிவு போல ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஜெயலலிதா உத்தரவாதம் அளித்துள்ளார். இக்கோரிக்கைகளின் அடிப்படையில் அ.தி.மு.க.,வுக்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் தி.மு.க.,வும் எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டன.இதனால், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம். முஸ்லிம் வேட்பாளர்கள் எந்த அணியை சேர்ந்தவர்கள் என பார்த்து, அவர்கள் எதிரணி வேட்பாளராக இருந்தால் அவர்களை தோற்கடிக்கவும் பிரசாரம் செய்வோம்.நாங்கள் தனி மேடை அமைத்து அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். அ.தி.மு.க., தனியாக மேடை அமைத்து கொடுத்தால், நாங்கள் அதிலும் தேர்தல் பிரசாரம் செய்வோம். எங்கள் மேடையில் வேட்பாளருக்கு மட்டுமே இடம் இருக்கும்.இவ்வாறு பாக்கர் கூறினார்.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள்

 
காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:

  1. திருத்தணி
  2. பூந்தமல்லி (தனி)
  3. ஆவடி
  4. திரு.வி.க.நகர் (தனி)
  5. ராயபுரம்
  6. அண்ணா நகர்
  7. தியாகராய நகர்
  8. மயிலாப்பூர்
  9. ஆலந்தூர்
  10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
  11. மதுராந்தகம் (தனி)
  12. சோளிங்கர்
  13. வேலூர்
  14. ஆம்பூர்
  15. கிருஷ்ணகிரி
  16. ஓசூர்
  17. செங்கம் (தனி)
  18. கலசப்பாக்கம்
  19. செய்யாறு
  20. ரிஷிவந்தியம்
  21. ஆத்தூர் (தனி)
  22. சேலம் வடக்கு
  23. திருச்செங்கோடு
  24. ஈரோடு மேற்கு
  25. மொடக்குறிச்சி
  26. காங்கேயம்
  27. உதகை
  28. அவிநாசி (தனி)
  29. திருப்பூர் தெற்கு
  30. தொண்டாமுத்தூர்
  31. சிங்காநல்லூர்
  32. வால்பாறை (தனி)
  33. நிலக்கோட்டை (தனி)
  34. வேடசந்தூர்
  35. கரூர்
  36. மணப்பாறை
  37. முசிறி
  38. அரியலூர்
  39. விருத்தாச்சலம்
  40. மயிலாடுதுறை
  41. திருத்துறைப்பூண்டி (தனி)
  42. பாபநாசம்
  43. பட்டுக்கோட்டை
  44. பேராவூரணி
  45. திருமயம்
  46. அறந்தாங்கி
  47. காரைக்குடி
  48. சிவகங்கை
  49. மதுரை வடக்கு
  50. மதுரை தெற்கு
  51. திருப்பரங்குன்றம்
  52. விருதுநகர்
  53. பரமக்குடி (தனி)
  54. ராமநாதபுரம்
  55. விளாத்திகுளம்
  56. ஸ்ரீவைகுண்டம்
  57. வாசுதேவநல்லூர் (தனி)
  58. கடையநல்லூர்
  59. நாங்குனேரி
  60. ராதாபுரம்
  61. குளச்சல்
  62. விளவங்கோடு
  63. கிள்ளியூர்  



பா.ம.க., போட்டியிடும் 30 தொகுதிகள் : தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி,
1.திருப்போரூர்
2.காஞ்சிபுரம்
3.செங்கல்பட்டு
4.ஆற்காடு
5.போளூர்
6.ஜோலார்பேட்டை
7.செஞ்சி
8.மயிலம்
9.நெய்வேலி
10.மேட்டூர்
11.ஓமலூர்
12.எடப்பாடி
13.பவானி
14.தர்மபுரி
15.பூம்பகார்
16.திண்டுக்கல்
17.ஆலங்குடி
18.மதுரவாயல்
19.அணைக்கட்டு
20.ஜெயங்கொண்டம்
21.பர்கூர்
22.வேளச்சேரி
23.கும்மிடிப்பூண்டி
24.புவனகிரி
25.கோவில்பட்டி
26.திண்டிவனம்
27.சோழவந்தான்
28.வேதாரண்யம்
29.பரமத்திவேலூர்
30.பாலக்கோடுஆகிய தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடும். இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் :
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
1.சோழிங்கநல்லூர்
2.செய்யூர்
3. அரக்கோணம்
4. கள்ளக்குறிச்சி
5.உளூந்தூர்பேட்டை
6.திட்டக்குடி
7.காட்டுமன்னார்கோயில்
8.அரூர்
9. சீர்காழி
10.ஊத்தங்கரை ஆகிய தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதியும் திருமாவளவனும் கையெழுத்திட்டனர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தொகுதிகள் : தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி துறைமுகம், வாணியம்பாடி, நாகை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மதிமுக முடிவு என்ன?

சென்னை : ம.தி.மு.க., வின் உயர் நிலைக் கூட்டம், சனிக்கிழமை காலை 9 மணிக்கு, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.ம.தி.மு.க., வெளியிட்ட செய்திக் குறிப்பு:ம.தி.மு.க., உயர் நிலைக் குழு கூட்டம் வருகிற 19ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. மாவட்டச் செயலர்கள், ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் அன்று மாலை 3 மணிக்கு நடைபெறும்.ம.தி.மு.க., தலைமை அலுவலகமான, தாயகத்தில் நடக்கும் இந்த கூட்டத்துக்கு அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்குவார்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, March 7, 2011

அனுஷ்கா நீக்கம்

அதிக சம்பளம் கேட்டு அடம்பிடித்ததால் அனுஷ்காவுக்கு வந்த பெரிய பாலிவுட் வாய்ப்பு பறிபோனது.

தமிழில் வெளியான சிங்கம் படம் இப்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்.

சிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அனுஷ்கா. இவரே இந்தியிலும் நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளரும் இயக்குநரும் விரும்பினர்.

ஆனால் இந்திப் படம் என்றதும் தனது சம்பளத்தை ரூ 2 கோடிக்கும் அதிகமாக உயர்த்திக் கேட்டாராம் அனுஷ்கா. இதனால் அவர் வேண்டாம் என முடிவு செய்து, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆனால் இதே அனுஷ்காவுக்கு தமிழில் ரூ 2 கோடி வரை தரத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

----------------
அட தமிழன் தான் வாரி வழங்கும் வள்ளலாச்சே

நெல்லையில் சசிகலா

நெல்லை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா திடீரென நெல்லை வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதிமுகவின் தேர்தல் வியூகங்கள், பிரசார இடங்கள், பிரசாரத்துக்கு வரும் ஜெயலலிதா தங்கு்மிடங்கள், தேர்தல் செலவுக்கு நிதி திரட்டுதல் போன்ற பணிகளை அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் சசிகலா ஓவ்வொரு பகுதிக்கும் சென்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நெல்லைக்கு சசிகலா வருகை தந்தார். பாளை மகாராஜா நகரில் உள்ள முன்னாள் அமைச்சரும், ஜெ பேரவை மாநில செயலாளருமான நயினார் நாகேந்திரன் வீ்ட்டுக்கு சென்ற அவர் அங்கு கட்சியின் மூத்த, முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோனை நடத்தினார்.

தேர்தல் பிரசாரத்துக்கு நெல்லைக்கு வரும் ஜெயலலிதா தங்குமிடம், தொகுதி நிலவரங்கள், நெல்லை மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் எவை என்பது குறித்தும் ஆலோசனை நடந்ததாம்.

சசிகலாவின் வருகையால் நெல்லையில் ஜெயலலிதா பிரசாரத்துக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் நெல்லை வருகை தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜெயலலிதா.

சென்னை: ஹஸன் அலியின் பல்லாயிரம் கோடி கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பில் ஜெயலலிதாவுக்கு பங்கிருப்பதாக செய்தி வெளியிட்ட முரசொலி, கலைஞர் டிவி மற்றும் மிட் டே பத்திரிகை ஆகியவற்றுக்குவக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜெயலலிதா.
இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது வக்கீல் மனோஜ்பாண்டியன் எம்.பி. மூலம் மிட்டே ஆங்கில பத்திரிகை மற்றும் முரசொலி, கலைஞர் டி.வி., போன்றவற்றுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது :

கருப்புப் பண முதலை ஹசன் அலி விவகாரத்தில் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்திகள் வந்துள்ளன. ஹசன் அலியின் பல்லாயிரம் கோடி வரிஏய்பில் தென்னிந்திய பெண் முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளார் என்று மிட்டே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதை முரசொலி பத்திரிகை, சுவிஸ் வங்கியில் தொழில் அதிபர் ஹசன்அலிகான் பதுக்கி வைத்துள்ள ரூ.35 ஆயிரம் கோடி கறுப்பு பணம் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என செய்தியாக்கி வெளியிட்டுள்ளது.

கலைஞர் டி.வி.யிலும் இச்செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இச் செய்தி அவதூறானது. உண்மைக்கு புறம்பானது.

ஜெயலலிதாவுக்கும், ஹசன்அலிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு ஜெயலலிதா பெயரை இதில் இணைத்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பாங்கிகளில் கறுப்புபணத்தை பதுக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார்.

அப்படிப்பட்டவர் இச்செய்தி மூலம் களங்கப்படுத்தப்பட்டுள்ளார். இச்செய்தியை வெளியிட்டமைக்காக ஜெயலலிதாவிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

-இவ்வாறு நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளது.

விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை முதல் நேர்காணல் - கருணாநிதி

சென்னை: திமுக சார்பில் போட்டியிட விரும்பி விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை முதல் நேர்காணல் தொடங்குகிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நேர்காணல் நடைபெறும்.


திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து திமுக தலைமைக் கழகம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. இன்றுடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைகிறது. இதையடுத்து அறிவாலயத்தில் இன்று பெரும் கூட்டம் அலை மோதி வருகிறது.

இதையடுத்து நாளை முதல் நேர்காணல் தொடங்குகிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்த நேர்காணல் நடைபெறும்.

முதல் நாளான நாளை காலை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தினருக்கும், மாலையில் விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டத்தினருக்கும் நேர்காணல் நடைபெறும்.

மார்ச் 9 - சிவகங்கை, மதுரை புறநகர், மதுரை மாநகர், ஈரோடு (காலை)
நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர் (மாலை)

மார்ச் 10 - புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி (காலை)
கரூர், பெரம்பலூர், அரியலூர் (மாலை)

மார்ச் 11 - நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சை, கடலூர் (காலை)
விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி வடக்கு, தர்மபுரி தெற்கு (மாலை)

மார்ச் 12 - திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் (காலை)
திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை (மாலை)

மார்ச் 13 - புதுச்சேரி மற்றும் காரைக்கால்.

நேர்காணலின்போது வேட்பாளராக விரும்புவோரிடம் பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்படவுள்ளது.

நேர்காணல் குழுவில் முதல்வர் கருணாநிதி தவிர அன்பழகன், மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

யாருக்கும், யாரும் அடிமை இல்லை - விஜயகாந்த்

சென்னை: ஆண்களும், பெண்களும் சரி சமமானவர்கள். யாருக்கும், யாரும் அடிமை இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கை:

வாழ்வில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள் சிறந்த பகுதியினராக வருணிக்கப்படுகிறார்கள். தாயாகவும், தாரமாகவும், அக்காள் - தங்கையாகவும் இருந்து தொண்டுக்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக இருந்து தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ளுகிறார்கள். மனித இனம் தொடர்வதற்குத் தாய்மார்களே காரணம். அவர்களின் நலனை பேணுகிற வகையில் கொண்டாடப்படுவதே இன்றைய உலக மகளிர் தினம்.

ஆண்களுக்கும் பெண்கள் அடிமை இல்லை. பெண்களுக்கும் ஆண்கள் அடிமை இல்லை. இருபாலாரும் ஒரு சேர நண்பர்கள் போல இருக்க வேண்டும் என்பதே திருவள்ளுவர் காட்டும் வழியாகும். ஆண், பெண் உறவு நட்பின் அடிப்படையில் அமைகிறபோது, வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் சவால்களை அவர்கள் ஒரு சேர சமாளிக்கின்றனர். கைகோர்த்துக் கொண்டு பணியாற்றுவதினாலேயே திருமணங்களில் கூட, கைகோர்த்துக் கொண்டு சுற்றிவரச் சொல்கிறோம்.

இந்த உயரிய மரபுக்கேற்ப அரசியலிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையை சமுதாய ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும். கல்வி, வேலை, மருத்துவ வசதி போன்றவற்றில் பெண்கள் இன்னும் சமநிலை அடையவில்லை. சமஅந்தஸ்து, சமவாய்ப்பு, சமநீதி பெண்களுக்கும் கிடைக்கும் வகையில் அதிக அக்கறை செலுத்த இந்த மகளிர் தினம் பயன்படட்டும் என்று கூறி இந்த தினத்தில் மகளிர் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ, தே.மு.தி.க. சார்பில் இதயமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தி்ன் விதிமுறைகள்

தேர்தல் பிரசார ஊர்வலத்தில் மேளம், கரகாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குதிரை, யானைகளையும் பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஊர்வலம் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்தி்ன் விதிமுறைகள் வருமாறு:

- ஊர்வலம் அனுமதிக்க நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும்.

- ஓலிபெருக்கி பயன்படுத்த கூடாது.

- ஆம்புலன்ஸ், சவ ஊர்வலத்துக்கு இடையூறு செய்ய கூடாது.

- ஊர்வலங்களை போலீசார் வீடியோ எடுப்பதை தடுக்க கூடாது.

இரும்பு ராடில் போன்றவற்றில் கொடிகளை எடுத்து செல்ல கூடாது

- ஓரே நேரத்தில் ஓன்ருக்கும் மேற்பட்ட கட்சிகள் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் சீனியரிட்டி அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

- ஊர்வலத்தில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர வேறு வாகனங்களில் செல்ல கூடாது.

- ஊர்வலத்தில் கொடிகள், பேனர்கள், ஆகியவற்றை மூங்கில் கழியில் வைத்து எடுத்து செல்லலாம்.

- இரும்பு ராடு போன்றவற்றில் கொடிகளை எடுத்து செல்ல கூடாது.

- மெகா போன் அனுமதி கிடையாது.

- ஊர்வலம் செல்லும்போது ஓரே இடத்தில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்வதோ, போக்குவரத்துக்கு இடையூறு செய்வதோ குற்றமாகும்.

- பிற கட்சிகள் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு அருகில் ஊர்வலம் செல்லும் போது அவற்றுக்கு இடையூறு செய்யாமல் செல்ல வேண்டும்.

- மாற்று கட்சி தலைவர்களின் உருவ பொம்மை, படங்கள், கேலி சித்திரங்களை எடுத்து செல்ல கூடாது.

- ஊர்வலத்தில் செல்பவர்கள் கட்சியின் சின்னம் பொரித்த தொப்பி, துண்டு போன்றவற்றை அணிந்து செல்லலாம். ஆனால் அவற்றை மொத்தமாக ஊர்வலம் தொடங்கும்போதோ, அல்லது ஊர்வலத்திலோ வினியோகிக்க கூடாது. -

ரெக்கார்டு டான்ஸ் ஆடக் கூடாது!:

- ஊர்வலத்தில் ரெக்கார்டு டான்ஸ், பார்ட்டி மேளதாளம், கரகாட்டம் போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. அதே போல் குதிரை, யானை போன்ற விலங்குகளை அழைத்து வர கூடாது.

- ஆயுதங்கள், கம்பிகள், பொம்பை துப்பாக்கி போன்ற ஆபத்து மற்றும் குழப்பம் விளைவிக்கும் பொருட்களை எக்காரணம் கொண்டும் கொண்டு வர கூடாது.

- ஊர்வலங்கள் நடத்துவது முன்பு பட்டாசு வெடிப்பது, வாணவேடிக்கை செய்வது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட கூடாது.

இவ்வாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Saturday, March 5, 2011

மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி

சென்னை: மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி - திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள்.

இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்ற வந்ததும், 90 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, 8 மந்திரிகள் என நிபந்தனைகளை அடுக்கினர்.

இறுதியில் திமுக 60 இடங்கள் தருவதாகக் கூறியும் காங்கிரஸ் இணங்கவில்லை. 63 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டியது. இன்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகக் கூறிச் சென்ற மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் வரவில்லை.

எனவே திமுக தனது உயர்நிலை செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது. இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் முக அழகிரி, துணை முதல்வர் முக ஸ்டாலின் உள்பட நிர்வாகிகள் கூடி கூட்டணி நெருக்கடி குறித்து விவாதித்தனர்.

இறுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற காங்கிரஸ் கட்சி விரும்பாததால், மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இனி பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் ராஜினாமா..

இந்த முடிவைத் தொடர்ந்து, மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் உடனடியாகப் பதவி விலகுகிறார்கள்.

திமுகவின் இந்த அதிரடி முடிவு காங்கிரஸ் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

63 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பது முறையா?-போட்டு உடைத்தார் கருணாநிதி!

சென்னை: கூட்டணி- தொகுதிப் பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தகுதிக்கு மீறிய பேராசை முதல்வர் கருணாநிதியை கோபப்படுத்தியுள்ளது.

கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உரிய இடம் அளிக்க வேண்டியுள்ள சூழலில் காங்கிரஸ் 63 இடங்களைக் கேட்பது நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர்.

இதுதொடர்பாக இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

திராவிட முன்னேற்ற கழகமும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் தோழமை கொண்ட காலத்திலிருந்து, மாநில அரசிலும் மத்திய அரசிலும் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் அனைவரும் பாராட்டத் தக்க வகையில் ஆட்சி நடந்து வருகிறது.

2011-ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலில் மற்ற தோழமை கட்சிகளோடு உடன்பாடு பற்றி பேசுவதற்கான முயற்சியிலே தமிழகத்தில் ஆளும் கட்சி என்ற நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டது.

திருமதி சோனியாகாந்தி அவர்களை நான் டெல்லியில் சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, வருகின்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசும், திராவிட முன்னேற்ற கழகமும் தோழமை கொண்டு போட்டியிடும் என்று அறிவித்தேன்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது கழகத்தின் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது தி.மு.கழகம் 132 இடங்களிலும், காங்கிரஸ் 48 இடங்களிலும், பா.ம.க. 31 இடங்களிலும், சி.பி.எம். 13 இடங்களிலும், சி.பி.ஐ. 10 இடங்களிலும் போட்டியிட்ட விவரங்களை எடுத்துக்கூறி- தி.மு.கழகம், காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் மீண்டும் உறவு கொண்டுள்ள நிலையில், அந்த கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களை தவிர்த்து எஞ்சி உள்ள சி.பி.எம், சி.பி.ஐ. போட்டியிட்ட 23 இடங்களை, தற்போது இந்த அணியிலே உள்ள பழைய கட்சிகளை தவிர புதிதாக இந்த அணியில் சேரும் விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் போக மீதமுள்ள இடங்களை தி.மு.கழகமும், காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்ளலாம் என்று பேசப்பட்டது. அவ்வாறு கணக்கிட்ட போது காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன.

ஆனால் அந்த இடங்களை அதிகமாக்க வேண்டுமென்று கேட்ட காரணத்தால் 51 இடங்கள் என்பது 53 என்றாகி, பின்னர் 55 என்றாகி, 58 என்றாகி கடைசியாக 60 இடங்கள் என்று குலாம்நபி ஆசாத் மூலம் தெரிவிக்கப்பட்டது.

அதனை மேலிடத்திலே தெரிவித்து விட்டு உறுதி செய்வதாகக் கூறினார். ஆனால் அதன்படி அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு, இன்று இரவு தொலைபேசி வாயிலாகத்தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை ஒதுக்க வேண்டுமென்றும், அந்த 63 இடங்களையும் அவர்களே நிச்சயித்து கேட்கும் தொகுதிகள் அத்தனையையும் தர வேண்டுமென்றும் தெரிவிக்கின்றார்கள்.

இது முறைதானா?:

காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்களை தி.மு.க. ஒப்புக் கொண்ட நேரத்திலே பா.ம.க.வுக்கு 31 இடங்கள், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 10 இடங்கள், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 இடங்கள், இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு இடம் என்ற வகையில் தி.மு.க.வுக்கு 122 இடங்கள் மட்டுமே எஞ்சி இருந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் என்று கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டுமென்று கேட்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.

இன்று உரிய முடிவு:

எனவே இதுபற்றி 5ம் தேதி (இன்று) மாலையில் நடைபெற உள்ள உயர்நிலை செயல்திட்டக் குழுவிலே விவாதித்து தி.மு.க. உரிய முடிவெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரண்டில் ஒன்று...

காங்கிரஸ் இருந்தால் இருக்கட்டும்... போனால் போகட்டும் என்ற முடிவுக்கு முதல்வரும் மற்ற தலைவர்களும் முடிவு செய்துவிட்டதன் விளைவே இந்த அறிக்கை என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது காங்கிரஸுக்கு கருணாநிதி விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை. இதற்கு மேலும் பிடிவாதம் காட்டினால் திமுக தான் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை மட்டும் அறிவிக்கும் திட்டத்தில் உள்ளதாகத் தெரிகிறது!

விருகம்பாக்கத்தில் பிரேமலதா போட்டி?

சென்னை: விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வரும் தேர்தலில் தேமுதிக சார்பில் விருகம்பாக்கத்தில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. போட்டியிட உள்ள தொகுதிகள் எவை- எவை என்று இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.ட

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான தே.மு.தி.க.வினர் சென்னை வந்து விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் உள்பட தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் அனைவரும் ஏற்கனவே மனு கொடுத்து விட்டனர். அவர்கள் எந்தெந்த தொகுதியில் களம் இறங்குவார்கள் என்பதில் தொண்டர்களிடம் பலத்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. விருகம்பாக்கத்தில் பிரேமலதாவை நிறுத்த அ.தி.மு.க.வும் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸை திமுக 'கழற்றிவிட' வேண்டும்: கி.வீரமணி

திருச்சி: தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசை கூட்டணியில் இருந்து தவிர்ப்பது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசுக்கு திமுக உடன்படக் கூடாது. கூட்டணியில் காங்கிரசை தவிர்ப்பது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்.

மக்களிடையே திமுகவிற்கு செல்வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கையும் இப்போது கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளையும் வைத்து தேர்தலை சந்தித்தாலே திமுக வெற்றி பெற்றுவிடும் என்றார்.

இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரது அறிக்கை- நியாய உணர்வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற காங்கிரஸ் கட்சி மிகவும் அதிகமான- நடைமுறைக்கு சாத்தியமற்ற- தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறிமுறைகளிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள்தான் அத்தொகுதிகளையும்கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை, காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், திமுக அவர்களின் நிபந்தனையை ஏற்கும் கட்சியாகவும் உள்ளது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.

திமுக தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கவே இந்தக் கோரிக்கை என்பது சற்று நிதானமாகச் சிந்திக்கும் எவருக்கும்- நடுநிலையாளருக்கும் தெளிவாகவே புரியும்.

இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் திமுக இல்லை. எனவே, இதுபோன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை பெறும் அளவுக்கு திமுக செயல் வீரர்- வீராங்கனைகளுக்கு அவ்வாய்ப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெரு உரு கொள்ள வேண்டும். எனவே திமுகவின் உயர்நிலை அரசியல் செயற்குழுக் கூட்டத்தில் சுதந்திரமாக முடிவெடுக்க தாய்க் கழகம் சார்பில் கனிவான வேண்டுகோளை முன் வைக்கிறது என்று கூறியுள்ளார்.

வீரமணியின் இந்த அறிக்கை-பேட்டி மூலமாக காங்கிரசுக்கு திமுக மீண்டும் தருவதாகத் தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன் வீரமணி வெளியிட்ட அறிக்கையில், இனியும் இனியும் திமுக குட்டக் குட்டக் குனியக் கூடாது. சுயமரியாதையை காக்க துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது தி.க. மூலம் திமுக விடுத்துள்ள எச்சரிக்கையாகவே கருதப்பட்டது. இந் நிலையில் திமுக உயர் மட்டக் குழு இன்று மாலை கூடவுள்ள நிலையில் காங்கிரஸை தவிர்க்குமாறு வீரமணி மீண்டும் கோரியுள்ளார்.

Friday, March 4, 2011

‌‌ஜெயலலிதா- விஜயகாந்த் சந்திப்பு: தே.மு.தி.க.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு


சென்னை : அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இரவு ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் இடையே கையெழுத்தானது. அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 24ம் தேதி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொகுதி பங்கீடு குழுவினருடன், தே.மு.தி.க., தொகுதி பங்கீட்டு குழுவினர் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். "தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளது' என, தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.


ஜெயலலிதாவின் 63வது பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு விஜயகாந்த் சார்பில் பூங்கொத்தும் வழங்கப்பட்டது. தே.மு.தி.க.,விற்கு தொகுதி பங்கீடு எண்ணிக்கையை முடித்தவுடன் ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் கட்சிக்கு தொகுதி பங்கீடு செய்ய அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க., - தே.மு.தி.க., பேச்சுவார்த்தை நடந்த பின், தேய்பிறை ஆரம்பித்ததால், அக்கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடரவில்லை.


இந்நிலையில் இன்று இரவு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தே,மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள் எவையெவை என்பது குறித்து இரு கட்சி தலைவர்களும் விரைவில் பேசி முடிவு செய்ய உள்ளனர்.

நன்றி: தினமலர்.


எனது கருத்து: எத்தனையோ நாளேடுகள், பத்திரிகைகள் தொகுதிகளை கணக்கிட்டாலும் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள்தான் என முதலிலிருந்தே சொல்லிய தினமலருக்கு என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்கள்


அபுதாபியில் க‌ல்வி விழிப்புண‌ர்வுக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

மார்ச் 05, அபுதாபியில் க‌ல்வி விழிப்புண‌ர்வுக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

அபுதாபி : அபுதாபியில் ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ கிளையின் சார்பில் க‌ல்வி விழிப்புண‌ர்வுக் க‌ருத்த‌ர‌ங்க‌ம் 05.03.2011 ச‌னிக்கிழ‌மை மாலை அபுதாபி ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் ந‌டைபெற‌ உள்ள‌து.
இந்நிக‌ழ்வில் த‌மிழ்நாடு முஸ்லிம் தொண்டு இய‌க்க‌ பொதுச்செய‌லாள‌ரும், இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழ் ஆசிரிய‌ருமான‌ முனைவ‌ர் பேராசிரிய‌ர் சேமுமு. முக‌ம‌த‌லி அவ‌ர்க‌ள் 'தாழ்ந்ததும் நிமிர்ந்ததும்“ என்றத் தலைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கிறார

அனைவரும் கலந்த கொள்ளகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

check ABU DHABI Educational Awareness Conference Invitation at

http://nrinews.vvonline.in/nrinews32.html


அழைப்பிதழ்:



கேன்சர் மருத்துவமனைக்கு இசையமைப்பாலர் ஹாரிஸ் ஜெயராஜ் உதவி

அடையாறிலுள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு ரவுன்ட் டேபிள் இந்தியா அமைப்பு சார்பில் ரூ 6 லட்சம் நன்கொடை வழங்கினார் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

18 வயது முதல் 40 வயதுள்ள இளைஞர்களுக்கான அமைப்பு ரவுண்ட் டேபிள் இந்தியா. இந்த அமைப்பின் சென்னை காஸ்மாபாலிட்டன் ரவுண்ட் டேபிள் 94 கிளை சார்பில் கடந்த அக்டோபர் மாதம் சூப்பர் கார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு நிதி திரட்டப்பட்டது.

இந்த நிதியிலிருந்து ரூ 6 லட்சத்தை மகேஷ் நினைவு அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது (மறைந்த இசையமைப்பாளர் மகேஷ் நினைவாக உருவாக்கப்பட்டது).

அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு தேவையான நவீன சிகிச்சை உபகரணங்களை வாங்கிக் கொள்ள இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இந்த நிதிக்கான காசோலையை பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.

வாழ்த்துக்கள் ஹாரிஸ். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் கடவுள் காப்பாற்றுவாராக...

பொய் வழக்கு போட்டதற்கு கண்டனம்: ஜெகன்மோகன் ஆதரவாளர்களை விடுவிக்க வேண்டும்; ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவு

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். இவர்களில் முன்னாள் மேயர் நவீந்திரநாத் ரெட்டி உள்பட முக்கிய தலைவர்கள் 25 பேர் மீது சமீபத்தில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களது சார்பில் ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது, அதில், “நாங்கள் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் என்பதால் போலீசார் எங்களை மிரட்டும் நோக்கத்தில் ஆள் கடத்தல் வழக்கில் எங்களை கைது செய்துள்ளனர். நாங்கள் யாரையும் கடத்தவில்லை. எங்களை விடுவிக்குமாறு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 10 பேரும் கோர்ட்டில் ஆஜராகி, “எங்களை ஜெகன் ஆதரவாளர்கள் கடத்த வில்லை. போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர்” என்றனர்.

இதை விசாரித்த நீதிபதி ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டருக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட 25 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.

ஸ்ரேயாவின் 'கண்களைத் திறந்த' பார்வையற்ற தம்பதி!


நடிப்பை பகுதி நேர வேலையாக்கிவிட்டு, ஸ்ரேயா ஆன்மீகம், சமூக சேவை பணிகளில் முழுமையான ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார் ஸ்ரேயா.

வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஜக்கிதான் இவரது சமூக - ஆன்மீக குரு. தினமும் யோகா, தியானத்தில் சில மணி நேரங்களைச் செலவிடும் ஸ்ரேயா, ஏழைகளுக்கு உதவிகளும் செய்கிறாராம்.

தனது இந்த மாற்றம் ஏற்பட்டது குறித்து ஸ்ரேயா இப்படிச் சொல்கிறார்: "சில நாட்களுக்கு முன் பார்வையற்ற கணவன்-மனைவியை பார்த்தேன்.

இருவரும் ஒருவருக்கொருவர் ரொம்ப பாசமாக இருந்தார்கள். அதோடு பிறருக்கு உதவிகளும் செய்து வந்தனர். அவர்களின் நடவடிக்கைகள் என் கண்களை திறந்தன. பார்வையற்ற தம்பதிகளே மற்றவர்களுக்கு இந்த அளவு உதவும் போது, கை, கால், கண் எல்லாம் சரியாக இருக்கும் நாம் ஏன் உதவிகள் செய்யக்கூடாது என்ற எண்ணம் என் மனதை மாற்றிவிட்டது.

அதன் பிறகு நானும் இப்போது முழு நேர சமூக சேவகியாக மாறிவிட்டேனேன். ஒரு அமைப்பு துவங்கி அதன் மூலம் பார்வையற்றோருக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது.

பார்வையற்ற தம்பதியை சந்தித்ததில் இருந்து அழகு பற்றி யோசிப்பதை விட்டு விட்டேன். மனசுதான் உண்மையான அழகு என்பதையும் புரிந்து கொண்டேன்...", என்றார்.

Thursday, March 3, 2011

சிகாகோவில் நம்ம பசங்க

சிகாகோவில் மார்ச் 26ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் சில்பிக்ஸ் சிறார் பட விழாவில் பங்கேற்க பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பட விழா 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.




பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படம் இது. இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். பல்வேறு பட விழாக்களில் பங்கேற்று பல பரிசுகளையும் தட்டி வந்தது.

சீனாவில் நடந்த 19வது கோல்டன் ரூஸ்டர் அன்ட் ஹன்ட்ரட் பிளவர்ஸ் திரைப்பட விழா, வங்கதேசத்தில் நடந்த 2வது சர்வதேச சிறார் திரைப்பட விழா உள்படபல்வேறு விழாக்களில் இது பங்கேற்றுள்ளது.

ஹைதராபாத்தில் நடந்த 16வது சர்வதேச சிறார் திரைப்பட விழாவில் தங்க யானை விருது பெற்றது. சிறந்த இயக்குநருக்கான விருது இதுவாகும்.

சென்செக்ஸ்' புள்ளிகள் அதிகரித்தது.

நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமை அன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' வர்த்தகம் முடியும்போது 43 புள்ளிகள் அதிகரித்தது.

காலையில் பங்கு வியாபாரம் தொடங்கியதும் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததையடுத்து `சென்செக்ஸ்' 193 புள்ளிகளை இழந்திருந்தது. மத்திய பட்ஜெட்டில், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு குறைந்தபட்ச மாற்றுவரியை விதித்தது போன்ற பாதகமான அம்சங்கள் முதலீட்டாளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் லிபியாவில் ஏற்பட்ட நெருக்கடிக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்ற செய்தி வெளியானதையடுத்து, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்தது. இதனையடுத்து இந்திய பங்குச் சந்தைகளில் மோட்டார் வாகனம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது. பொறியியல் துறையைச் சேர்ந்த பீ.எச்.இ.எல். மற்றும் லார்சன் - டூப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை 3.5 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது.

மேலும் பிப்ரவரி 19-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் உணவு பொருள் பணவீக்கம் 10.39 சதவீதமாக குறைந்துள்ளது என்ற புள்ளி விவரத்தை மத்திய அரசு வெளியிட்டது. இதனையடுத்து வங்கி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இதுபோன்ற காரணங்களால் மதியத்திற்கு பிறகு `சென்செக்ஸ்' 157 புள்ளிகள் வரை உயர்ந்து இருந்தது.

இருப்பினும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி மீண்டும் பங்குகளை விற்பனை செய்ததால், தகவல் தொழில்நுட்பம், உலோகம், மருந்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது `சென்செக்ஸ்' 43.26 புள்ளிகள் மட்டும் அதிகரித்து 18,489.76 புள்ளிகளில் நிலைபெற்றது. அதிகபட்சமாக 18,603.57 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,253.62 புள்ளிகளுக்கும் சென்றது. `சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 16 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 13.90 புள்ளிகள் உயர்ந்து 5,536.20 புள்ளிகளில் நிலை கொண்டது.

ரயில் டிரைவரின் தனிப்பயணம்

வண்டூர் : ரயிலை, ரயில்வே கேட் அருகே நிறுத்தி விட்டு, இன்ஜின் டிரைவர், கறி (இறைச்சி) வாங்க கடைக்குச் சென்று, நீண்ட நேரம் கழித்து திரும்பினார். இதனால், ரயில்வே கேட்டில், நீண்ட நேரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், öஷாரனூருக்கும், மலப்புரம் மாவட்டம் நிலம்பூருக்கும் இடையே, ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இம்மார்க்கத்தில், கடந்த 27ம் தேதி காலை 8.30 மணிக்கு நிலம்பூர்- öஷாரனூர் ரயில், வாணியம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரயில், அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் திடீரென நிறுத்தப்பட்டது. டிரைவர், சாவகாசமாக கீழே இறங்கி, சாலையில் நடந்து சென்றார். அவர் எங்கே போகிறார் என பலருக்கும் தெரியவில்லை. சற்று நேரம் சென்ற அவர், அங்குள்ள மட்டன், சிக்கன் கறி விற்கும் கடைக்குச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், நிறைய வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரயில் டிரைவரும், அவர்களுடன் வரிசையில் நின்று, நீண்ட நேரம் கழித்து, கறி வாங்கிக் கொண்டு திரும்பினார். பின், அவரே பச்சைக் கொடியை காண்பித்து, ரயில் புறப்படுவதற்கான ஒலியையும் எழுப்பி, ரயிலைக் கிளப்பிச் சென்றார். ரயில்வே கேட் பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டதால், அதை கடப்பதற்காக, வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. விடுமுறை தினம் என்பதால், ரயில் பயணிகளும் சிரமப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வாணியம்பலம் ரயில் நிலைய அதிகாரியிடம் கேட்டதற்கு, "சிக்னல் கிடைக்காமல் ரயில் நிறுத்தப்பட்டிருக்கலாம். விபத்து போன்ற ஏதாவது காரணம் இருந்தால் மட்டுமே ரயிலை வழியில் நிறுத்த முடியும். எனினும், இது தொடர்பாக புகார் வந்தால், விசாரணை நடத்தப்படும்' என்றார். ஏற்கனவே, கோழிக்கோடு - காசர்கோடு ரயில் மார்க்கத்தில் ரயில் பயணியொருவர், ஓடும் ரயிலில் இருந்த அபாயச் சங்கிலியை பிடித்திழுத்து ரயிலை நிறுத்தி அருகே உள்ள மதுபான கடைக்குச் சென்று மது வாங்கிக் கொண்டு, "கூலாக' வந்து ரயிலில் ஏறிய சம்பவம், சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது, ரயில் டிரைவரே, ரயிலை நிறுத்தி, கறி வாங்கிய சம்பவம், பொதுமக்களிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

--------

நல்லகாலம் ரயிலை அவர் வீட்டில கொண்டு பார்க் பண்ணாம இருந்தாரே அந்தளவுக்கு சந்தோஷம்.

சுயதொழில் தொடங்குவோம் வாருங்கள்

சுயதொழில் பற்றிய ஒரு அருமையான பதிவை நண்பர் சௌந்தர் ஆரம்பித்திருக்கிறார்.

அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்

பிரமிடு சாமியார் வெங்கடேஷ்குமார் வெளியே வந்தார்

வெள்ளகோவில் : இரண்டரை ஆண்டுகளாக பிரமிடுக்குள் தியானம் செய்த முத்தூரை சேர்ந்த சாமியார் வெங்கடேஷ்குமார், சிவராத்திரி தினமான நேற்று வெளியே வந்தார்.


அவரை காண சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.முத்தூர், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி - கமலம். சதீஸ், வெங்கடேஷ்குமார் என்று இரு மகன்கள். எட்டு ஆண்டுக்கு முன் மும்பையில் நடந்த கார் விபத்தில் மூத்தவரான சதீஸ் இறந்து விட்டார். வெங்கடேஷ்குமார் (28) சினிமா துறையில் ஆர்வம் கொண்டு, சென்னை சென்று வாய்ப்பு தேடியுள்ளார். வாய்ப்பு கிடைக்காத நிலையில், நித்யானந்தா ஆசிரமம், வள்ளலார் ஆசிரமங்கள் சென்றுள்ளார். வள்ளலார், ஓசோ புத்தகங்களை தொடர்ந்து படித்ததால், ஆன்மிக ஈடுபாடு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து வீடு திரும்பிய வெங்கடேஷ்குமார், இமயமலை சென்று தியானம் செய்ய இருப்பதாகவும், அதற்கு அனுமதி வழங்குமாறு தாய் தந்தையரிடம் கேட்டுள்ளார். ஒரு மகன் இறந்த லையில், மற்றொரு மகனும் தன்னைவிட்டு பிரிந்து விடக்கூடாது என்று, வீட்டின் அருகிலேயே தியானம் செய்யுமாறு கூறியுள்ளனர்.

வீட்டின் அருகிலேயே 12 அடி உயரத்தில், சுவாசத்திற்காக ஆங்காங்கே சிறு துளைகள், உள்ளேயே குளியலறையுடன், உணவு கொடுக்க சிறு திறப்புடன் பிரமிடு உருவாக்கப்பட்டது. கடந்த 2008 செப்., 3ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெங்கடேஷ்குமார் தியானம் செய்வதற்காக பிரமிடுக்குள் சென்றார்; பிரமிடு நுழைவாயில் பகுதி ஹாலோபிளாக் கற்களால் அடைக்கப்பட்டது. பிரமிடுக்குள் மாதிலிங்க மரத்தினாலான இருக்கையில் அமர்ந்து, தியானத்தை தொடர்ந்தார். காலை மற்றும் மாலை நேரங்களில் பால், மதியம் பருப்பு சாதம், உணவு வழங்க அமைக்கப்பட்ட துளை வழியாக அவரது தாயார் வழங்கி வந்தார். மற்றவர்கள் எவரிடமும் பேசாமல், தனது தாயிடம் மட்டுமே நடப்புகள் குறித்து தெரிந்து கொண்டுள்ளார். பிரமிடுக்குள் அமர்ந்து தொடர் தியானத்தில் ஈடுபட்டு வந்த அவர், இரண்டரை ஆண்டுகளான நிலையில், சிவராத்திரி தினத்தன்று தான் வெளியே வர இருப்பதாக அவரது தாயாரிடம் கூறினார். பிரமிடு சாமியார் வெளிவருகிறார் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. சாமியாரை பார்க்க அதிகளவில் மக்கள் வருவர் என்பதை கருத்தில் கொண்டு, கூட்டத்தை கட்டுப்படுத்த கம்புகளால் தட்டி அமைக்கப்பட்டது. பிரமிடு அருகிலேயே பூஜை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

சிவராத்திரி தினமான நேற்று பிரமிடு சாமியாரை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் வெள்ளகோவில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை 5.00 மணியளவில், சாமியார் வெளிவருவதற்காக நுழைவாயில் பகுதி இடிக்கப்பட்டது. மாலை 5.15 மணியளவில் சாமியார், பிரமிடு விட்டு வெளியே வந்தார். அவரை பார்த்த பக்தர்கள், பக்தி பரவசத்தில் வணங்கினர். அவர் வீட்டுக்குள் சென்று தனது அண்ணன் உருவப்படத்தை வணங்கி விட்டு, பூஜை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தார். 5.30 மணி முதல் சிவ பூஜை செய்யப்பட்டது. பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். அன்னதானமும் வழங்கப்பட்டது.பிரமிடு சாமியார் நிருபர்களிடம் கூறியதாவது: புலன்களை அடக்கி சத்தியத்தை அடைவதற்காக, நான் தேர்ந்தெடுத்தது பிரமிடு தியானம். பிரமிடு என்பது காஸ்மிக் சக்திகளை கிரகித்து கொடுப்பதாக உள்ளது. வெளிசூழ்நிலைகளில் தியானம் செய்வதைவிட, பிரமிடு தியானம் மிகச் சிறந்தது. அதற்காக, அனைவரும் பிரமிடு தியானம் செய்ய வேண்டும் என்று இல்லை. அவரவருக்கு பிடித்த பாதையில் சென்று, சத்தியத்தை அடையலாம். என்னை நித்யானந்தா சீடர் என்றும் பிரமிடு சாமியார் என்றும் கூறுகின்றனர். நித்யானந்தா ஆசிரமத்தில் இரண்டு மாதங்கள் இருந்தேன். அவரது கொள்கைகள் பிடிக்காமல், வெளியே வந்து, வள்ளலார் ஆசிரமத்தில் சேர்ந்தேன். வள்ளலார், ஓசோ, விவேகானந்தர் கொள்ளைகள், எனது ஆன்மிக பாதைக்கு வழிகாட்டுதலாக உள்ளன. பிறர் என்னை எப்படி அழைத்தாலும், நான் வைத்துக்கொண்ட பெயர் ஸ்ரீசத்ய சம்பூர்ண வெங்கடேஷ சுவாமிகள் என்பது. பிரமிடில் கதவுகள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து தியானத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். வேறெந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இவ்வாறு, பிரமிடு சாமியார் கூறினார்.

நன்றி: தினமலர்

சென்னையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் தேர்தல் ஆணையம் கூட்டுகிறது

சென்னை: சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தமிழக கட்சிகளுடன் இன்று மாலை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல்நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இவை குறித்து அரசியல் கட்சிகளிடம் விளக்கி அவற்றை முறையாக கடைப்பிடிப்பது குறித்து கட்சிகளிடம் நேரடியாக விளக்க திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

இதற்காக இன்று மாலை 5.30 மணிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இக்கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்தும் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் விளக்குவார்.

இந்த சந்திப்பின்போது தேர்தல் தேதி குறித்து அதிருப்தி அடைந்துள்ள கட்சிகள் அவற்றை தெரிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எக்காரணம் கொண்டும் தேர்தல் தேதி மாற்றி அமைக்கப்படாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெ - விஜயகாந்த் இன்று சந்திப்பு? தொகுதிப் பங்கீடு நிறைவு?

சென்னை: அதிமுக, தேமுதிக இடையே நடந்து வந்த தொகுதிப் பங்கீட்டுப் பேரம் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த்தும் இன்று சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி கிடையாது என்று முழங்கி வந்தவர் விஜயகாந்த். மேலும் தனது கூட்டம் ஒவ்வொன்றிலும், யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று தொண்டர்களிடம் கேட்டும் வந்தவர் அவர். ஆனால் தற்போது விஜயகாந்த்தும், கூட்டணி அரசியலில் குதித்து விட்டார்.

தற்போதைய சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடுகிறது தேமுதிக. இதற்காக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இரு கட்சிகளுக்கும் இடையே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து விஜயகாந்த்துக்குச் சொந்தமான கேப்டன் டிவி அன்று வெளியிட்ட செய்தியில், அதிமுக தலைமை விரும்பி அழைத்ததால் தேமுதிக குழுவினர் பேசப் போனதாக திரும்பத் திரும்பக் கூறியது. மேலும், தேமுதிக பேச்சுவார்த்தைக்கு வந்ததால் அதிமுகவும், அதன் தொண்டர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இதனால் தேமுதிகவினருக்கு இந்த உடன்பாட்டில் உடன்பாடு இல்லையோ என்று எண்ணும் வகையில் இருந்தது கேப்டன் டிவி செய்தி.

இந்த நிலையில், தேமுதிகவுக்கான தொகுதிப் பங்கீட்டு நடைமுறைகளை அதிமுக முடித்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்று ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் சந்தித்துப் பேசி உடன்பாட்டில் கையெழுத்திடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடன்பாட்டில் கையெழுத்திட விஜயகாந்த் போயஸ் கார்டனுக்குப் போவாரா அல்லது அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு போவாரா என்பது தெரியவில்லை.

தேமுதிகவுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்தவுடன், ரொம்ப காலமாக அதிமுகவுடனேயே இருந்து வரும் மதிமுகவுக்கும், தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் இடதுசாரி கட்சிகளுக்கும், பிறருக்கும் ஜெயலலிதா தொகுதிகளை ஒதுக்குவார் என்று தெரிகிறது.

நடிகர் கார்த்திக்குக்கும் சில தொகுதிகள் அல்லது ஒரு தொகுதி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஜெயலலிதா, விஜயகாந்த் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருப்பதற்கு, இன்று நிறைந்த அமாவாசை நாள் என்பதால்தான். ஜெயலலிதாவும் சரி, விஜயகாந்த்தும் சரி ஜோசியத்தின் மீது அபார நம்பிக்கை உள்ளவர்கள். எனவே இன்று சந்தித்துப் பேசி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!! ஒரு சராசரி குடிமகன் பார்வையில்

நண்பர்களே!!!

தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.

க்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999
ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.

தற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாயக் கணக்கு:

ந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.

ப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.

தோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?

க்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.

னநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.

இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.


துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.


துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

ப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.

ரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.

வர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

ங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

னது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

சிவகுமார்.M
சீனியர் எஞ்சினியர்
தனியார் நிறுவனம்


---------------------------


நன்றி: சிவகுமார்


தேர்தல் கமிஷனின் அதிரடி

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அவை குறித்த விவரம்:

- கோவில், மசூதி, ஆலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

- ஜாதி, மதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.

- பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசார சுற்றுப்பயணங்கள், ஊர்வலங்கள் அனைத்துக்கும் போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும்.

- தேர்தல் பிரசாரத்தின்போது கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் யாரேனும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினால், அதற்கான செலவுக் கணக்கை வேட்பாளர்களின் பெயரில்தான் ஏற்றப்படும்.

- ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியின் நட்சத்திப் பிரசாரகர்கள் யார் என்பதை ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பிரசாரகர்களின் பயணச் செலவுகள், வேட்பாளர் கணக்கில் வராது.

- பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது. தனியார் இடங்களில் சுவர்களின் அனுமதி பெற்ற பிறகே தேர்தல் விளம்பரம் செய்யவேண்டும்.



- விளம்பர செலவுகள் அனைத்தும் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

- அரசியல் பொதுக் கூட்டங்கள், பிரசாரங்கள், சுவர் விளம்பரங்கள், ஊர்வலங்கள், பேனர்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்கான செலவுகள் கணக்கிடப்பட்டு வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும்.

- தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் கார், வேன், பஸ் ஆகியவற்றின் வாடகை எவ்வளவு என்பதை கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்து அந்த தொகை தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

- தேர்தலில் முறைகேட்டை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்படும். இதில் ஒரு துணை தாசில்தார், ஒரு போலீஸ் அதிகாரி, 4 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெறுவார். இவர்கள் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் 4 அல்லது 5 சோதனை மையம் அமைக்கப்படும். இந்த மையங்கள் அடிக்கடி இடமாற்றப்படும்.

- ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி உதவி இயக்குனர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் வேட்பாளருக்கு வரும் பணம் ஆய்வு செய்யப்படும்.

- வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும்போது 3 வாகனங்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் அலுவலகம் அருகே 100 மீட்டர் வரை அனுமதிக்கப்படும். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்துக்கு செல்லலாம். அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சொத்து விவரம், வழக்கு விவரம் ஆகிய 2 வகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். சொத்துக்கள் விவரங்களை மொத்தமாக குறிப்பிடாமல் தனித்தனியாக குறிப்பிடவேண்டும். அந்த சொத்து யாரிடம் வாங்கியது? அது என்ன சொத்து? வாங்கிய போது மதிப்பு என்ன? இப்போது மதிப்பு என்ன? அதில் முதலீடு செய்த தொகை என்ன? போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதுதவிர அவரது குடும்பத்தில் உள்ள வாரிசு தாரர்கள் சொத்து கணக்கு காட்டவேண்டும்.

- கல்யாண மண்டபங்கள் கண்காணிக்கப்படும். அதில் என்ன விழா நடக்கிறது? எதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது? என்பது பற்றி கண்காணிக்கப்படும்.

- மொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும். இது செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில், சிறப்பு பட்டமளிப்பு விழா நடந்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் ராமசாமி, தினத்தந்தி நாளிதழ் இயக்குனர் சிவந்தி ஆதித்தன், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த், இந்திய கிரிக்கெட் அணி பிசியோதெரபிஸ்ட் அம்ஸ்ராஜ் ஆகியோருக்கு, "மதிப்புறு டாக்டர்' பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்தியநாதன், பல்கலைக்கழக பதிவாளர் சுகுமார், அரசு உயர்கல்வி செயலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் ராமசாமி பேசும் போது, "விளையாட்டிற்காகவே நான் என் வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். அரசு வேலைவாய்ப்பில், ஜாதிவாரியாக இட ஒதுக்கீடு வழங்கி வருவது போல், விளையாட்டு வீரர்களுக்கும் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்றார்.

கார் விலை உயரும் அபாயம்

டெல்லி: கார்களுக்கான பாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரிவிதிப்பு முறையில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்களின் சொகுசு கார்களின் விலை ரூ.8லட்சம் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகில் வேகமாக வளரும் இரண்டாவது கார் சந்தை என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதனால், பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் கார் விற்பனை செய்து வரும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து, பின்னர் அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகின்றன.

இதுபோன்று, எஞ்சின் உள்ளிட்ட முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து பின்னர் அசெம்பிள் செய்வதற்கு சிகேடி யூனிட் என்று அழைக்கப்படுகிறது. கார் பாகங்களை சிகேடி யூனிட் பிரிவில் இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு இறக்குமதி சுங்க வரியில் சலுகை அளித்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கார் மற்றும் பைக்கை அசெம்பிள் செய்வதற்கு தேவைப்படும் முக்கிய பாகங்களான எஞ்சின்,கியர் பாக்ஸ், சேசிஸ் ஆகியவற்றை சிகேடி யூனிட் பாகங்களாக கருத முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கார் மற்றும் பைக்கை இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இனி வரிச்சலுகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வெளிநாட்டு நிறுவனங்களில் குறிப்பிட்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பிஎம்டபிள்யூ,ஆடி,மெர்சிடிஸ் பென்ஸ்,டொயோட்டோ மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் குறிப்பிட்ட சொகுசு கார்களின் விலை ரூ.8 லட்சம் வரை உயரும் என கூறப்படுகிறது.

மத்திய அரசின் இந்த புதிய வரிவிதிப்பு முறையால், சொகுசு கார்களின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என்பதால், பல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கவலையடைந்துள்ளன. இந்த புதிய வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவதை மறுபரிசீலனை செய்யவும் மத்திய அரசுக்கு அந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதிய வரிவிதிப்பு முறையை மத்திய அரசு கைவிடாவிட்டால், இந்தியாவில் எதிர்கால முதலீடுகள் குறித்து பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

----------

எல்லாம் சரிங்க முதலில் கேஸ், பெட்ரோல் போன்ற அடிப்படை விஷயங்களை விலை ஏத்தாம சரி.

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்

சென்னை: காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் அனுமார் வால் போல நீண்டு கொண்டிருக்கும் நிலையில் வருகிற 5ம்தேதி உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளது திமுக.

மிக முக்கிய முடிவுகளை எடுக்கும்போதுதான் இந்தக் கூட்டத்தை திமுக கூட்டுவது வழக்கம். எனவே காங்கிரஸ் தொடர்பாக முக்கிய முடிவு எதுவும் இதில் எடுக்கப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், 5ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இதில் சட்டசபைத் தேர்தல், திமுக தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக என்று எதையும் அவர் கூறவில்லை.

இந்த கூட்ட அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக இறுதிக் கெடு என்றும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

-----------

அணிகள் மா(நா)றலாம் என பேச்சுக்கள் கசிய தொடங்க்யுள்ளது.

அள்ளிக் கொடுக்கிறார்லே... சாலமன் பாப்பையா

சென்னை: அரசு ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார் முதல்வர் கருணாநிதி. அவரது ஆட்சி தொடர வேண்டும் என்றார் பிரபல தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா.

மேயர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. இந்த விழாவில் கட்சி சார்பற்று முழுக்க முழுக்க தமிழறிஞர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் பேசியவர்கள் அரசியலைத் தொடத் தவறவில்லை.

பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசுகையில், ஒரு குழந்தை பிறந்தால் பெற்றோருக்கும் உற்றார்-உறவினர்களுக்கும்தான் மகிழ்ச்சி. ஆனால் 59 வயது இளைஞரின் பிறந்த நாளை ஊரே உறவாடி கொண்டாடி மகிழ்கிறது. ஒருவரை மக்கள் எளிதில் பாராட்டி விடமாட்டார்கள். அதற்கான தகுதி இளைஞர்களை வழிநடத்தும் தளபதியிடம் உள்ளது. தந்தையின் தடத்தில் எப்படி நடப்பது என்பதை இன்றும் படித்து பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார்.

கருணாநிதி ஆட்சியில் அள்ளி கொடுக்கிறாருங்க.... ஓய்வு பெற்ற பேராசிரியரான எனக்கு ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா? மாதம் ரூ. 33 ஆயிரம். வாங்கிட்டு போ... சந்தோஷமா வாழு என்று தமிழக மக்களை வாழ வைக்கிறவர் அவர். தந்தைக்கு பெருமை சேர்ப்பவர் தளபதி. பேசுவதை விட செயல் திறன்தான் நாளைய வெற்றிக்கு அடையாளம். அப்படிப்பட்டவர்கள் மு.க. ஸ்டாலின், மேயர் மா.சுப்பிரமணியன்.

இளைஞர்கள்தான் இந்த நாட்டின் மாற்றத்தை உருவாக்குபவர்கள். இளைஞர்களை வழி நடத்துபவர் மு.க.ஸ்டாலின். கலைஞரும், தளபதியும் மனிதர்களை நேசிப்பவர்கள். தமிழகம் வளர கருணாநிதி ஆட்சி தொடர வேண்டும், என்றார்.

விழாவில் திண்டுக்கல் லியோனி பேசுகையில், தமிழ் காப்பாற்றப்பட வேண்டும். ஒரு மொழி அழிந்து விட்டால் இனம் அழிந்து விடும். தமிழ் வாழ, தமிழகம் வளர கருணாநிதி ஆட்சி தொடர வேண்டும் என்பது தமிழறிஞர்கள் ஆசை. இளைஞர்கள் தடம் மாறாமல் அணிவகுக்க வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, இளசை சுந்தரம், புலவர் ராமலிங்கம், பேராசிரியர் சேஷாத்திரி ஆகியோர் பேசினார்கள்.

--

அள்ளிக் கொடுக்கிறது சரி, மக்களுக்கு கிள்ளியாவது கொடுக்க சொல்லுங்க....

ஏப்ரல் 13ம் தேதி பேய் விரட்டுவோம் : விஜயகாந்த் ஆவேசம்



சென்னை : ""தமிழகத்தை பிடித்துள்ள ஊழல், லஞ்ச பேய்களை, மக்கள் ஆதரவால் விரட்டி அடிப்போம்'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறுவது, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகத்தில் நேற்று துவங்கியது. பொது தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுக்காக நான்கு கவுன்டர்கள், தனி தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் வசதிக்காக இரண்டு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான கட்சி நிர்வாகிகள், தங்கள் ஆதரவாளர்கள் புடை சூழ வந்து, விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். பொது தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களிடம் 5,000 ரூபாய் தேர்தல் நிதியாக வசூலிக்கப்பட்டது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தனது விருப்ப மனுவை கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் வழங்கினார்.


அப்போது நிருபர்களுக்கு விஜயகாந்த் அளித்த மினி பேட்டி:வழக்கமாக 13ம் தேதியை பேய்களுக்கு உகந்த நாள் என்று கூறுவார்கள். அந்தநாளில் தேர்தலும், ஓட்டு எண்ணிக்கையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை ஊழல் மற்றும் லஞ்ச பேய்கள் பிடித்து ஆட்டுகின்றன. இன்றைய ஆட்சியாளர்களால் தமிழனுக்கு நாடு முழுக்க அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆதரவுடன் வரும் ஏப்ரல் 13ம்தேதி, தேர்தலில் ஊழல் மற்றும் லஞ்ச பேய்களை விரட்டி அடிப்போம். ஏழை மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகைகள் செய்வோம்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.


கட்சியின் மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தே.மு.தி.க., விருப்ப மனுவில் சிக்கலான கேள்விகள்!ஏப்ரல் 13ம் தேதி நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இணைந்து தே.மு.தி.க., போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் தே.மு.தி.க.,விற்கு 42 சீட்கள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்ப மனுக்களை மார்ச் 2 முதல் 6ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி, விருப்பமனு வினியோகம் நேற்று காலை 10 மணியளவில் சென்னை, கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் துவங்கியது. பொது தொகுதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய், தனித்தொகுதிகளுக்கு 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு, கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டன. விருப்ப மனுக்களை வாங்கி, ஆர்வமுடன் பூர்த்தி செய்ய நினைத்த பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.


அதில், விருப்ப மனு தாக்கல் செய்பவரின் பெயர், வயது, கல்வித்தகுதி, தமிழைத் தவிர சரளமாக பேசக் கூடிய மொழி குறித்த விவரங்கள், போட்டியிட விரும்பும் தொகுதி, போட்டியிட விரும்பும் தொகுதியில் சொந்த ஊர் உள்ளதா என்ற விவரம், தற்போது குடியிருக்கும் இடம் உள்ள தொகுதி, மனு கொடுப்பவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்ற விவரம், போட்டியிட விரும்பும் தொகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் மற்றும் மொத்த வாக்காளர்கள் விவரம் ஆகிய கேள்விகள் இடம் பெற்றிருந்தன.


மேலும், போட்டியிட விரும்புவதற்கான பிரத்யேக காரணம், வெற்றி வாய்ப்பு குறித்த விவரங்கள், கட்சி துவங்குவதற்கு முன் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் எனில் அது குறித்த விவரம், மன்றம் மற்றும் கட்சி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள், கட்சியில் தற்போது வகிக்கும் பொறுப்பு, தற்போது வகிக்கும் அரசுப்பணி அல்லது முன்பு வகித்த அரசுப்பணி குறித்த விவரங்களும் கேட்கப்பட்டிருந்தன. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட விவரங்கள், குடும்பம் குறித்த விவரம், குடும்ப உறுப்பினர்கள் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்களா என்ற விவரம், அவர்கள் எந்த கட்சியில் போட்டியிட்டார்கள் என்பது குறித்த விவரம் உள்ளிட்ட கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
எந்தவொரு அரசியல் கட்சிகளும் கேட்காத அளவிற்கு, எழுப்பப்பட்டிருக்கும் புதுமையான மற்றும் சிக்கலான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கட்சியினர் திணறினர். பலர் மனுக்களை அங்கு பூர்த்தி செய்ய முடியாமல், வீட்டிற்கும் வாங்கிச் சென்றனர். வீட்டில் மனுவை பூர்த்தி செய்து, கோவில்களில் வைத்து பூஜை செய்த பின், வரும் 4ம்தேதி வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை என்பதால் அன்று அவற்றை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


விஜயகாந்த் உஷார்: வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, கட்சியினர் மாற்றுக் கட்சிகளிடம் விலைபோய் விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த சட்டசபை, உள்ளாட்சி, லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க.,விற்கு நடந்த சம்பவங்களை பாடமாகக் கொண்டே இம்முறை வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விருப்ப மனு கேள்விகளை மூன்று நாட்கள் தீவிர ஆலோசனைக்குப் பிறகே விஜயகாந்த் தயாரித்துள்ளதாக தெரிகிறது.


---------------


நல்லா இருந்தாரு இப்ப பாருங்க, பேயோட்டற மந்திரவாதி மாதிரி ஆயிட்டாரு, நான் என்ன சொல்ல வரேன்னா...அட விடுங்கப்பா.

தேர்தல் கமிஷன் மீது கருணாநிதி பாய்ச்சல்



சென்னை : "தேர்தல் கமிஷன் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இது குறித்த அவரது அறிக்கை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் பிரசாரம் செய்ய 17 நாட்கள் தான் உள்ளன. தேர்தல் நடைபெறும் நாள் ஏப்ரல் 13. ஓட்டு எண்ணிக்கை நடைபெறப் போவது மே 13. தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். மேற்குவங்கத்தில் தேர்தல் முடிந்த பின்தான் ஓட்டு எண்ணிக்கை நடைபெற வேண்டுமானால், அனைவரையும் சிரமப்படுத்தி ஏப்ரல் 13ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன?மே 13ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டாலும் முழு முடிவு 14ம் தேதி தான் தெரியும். தற்போதைய சட்டசபை முடிவுற்று அடுத்த சட்டசபை மே 17ம் தேதியே துவங்கப்பட வேண்டும்.தற்போதைய சட்டசபை மே 16ம் தேதியுடன் முடிகிறது. 14ம் தேதி முடிவு தெரிந்து, எந்த கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது என்பது முடிவாகி, அந்த கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி, சட்டசபை கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.அவர் கவர்னரை சந்தித்து, கவர்னர் அமைச்சரவை அமைக்க சொல்லி கேட்டு, அதன் பின் அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு, அந்த அமைச்சர்கள் கவர்னர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து புதிய சட்டசபையை மே 17ம் தேதிக்குள் கூட்டியாக வேண்டும். இதற்கு இரண்டே நாட்கள் தான் இருக்கின்றன. அதற்குள் இத்தனை பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால் முடித்தாக வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

மே 17ம் தேதியே புதிய சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்றால், எதற்காக அவசர, அவசரமாக ஏப்ரல் 13ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சில நாட்கள் அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் அளித்து ஏப்ரல் கடைசியிலோ, மே முதல் வாரத்திலோ அனைவரும் எதிர்பார்த்ததை போல தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம். தேர்தல் கமிஷன் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லவா?இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

----

அட இன்னும் எங்க தொகுதி பங்கீடு பிரச்சனையே முடியலை அதுக்குள்ள என்னய்யா அவசரம்?

தேர்தல் செய்தி - 01

களத்தில் குதித்தது தேர்தல் கமிஷன்: இலவச கலர் "டிவி' வழங்க தடை



சென்னை : தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை, இலவச கலர் "டிவி' வினியோகத்தை நிறுத்தி வைக்கவேண்டுமென, அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதவிர, இலவச வினியோகங்களை கண்காணிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது.


தமிழக அரசு, அனைத்து தரப்பினருக்கும் இலவச கலர் "டிவி'க்கள் வழங்கி வருகிறது. கடைசியாக கொள்முதல் செய்யப்பட்ட, "டிவி'க்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வினியோகிக்கும் பணியில், ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் இம்மாதம் முதல் தேதியில் இருந்து தீவிரம் காட்டத் துவங்கினர். ஆனால், மார்ச் 1ம் தேதி, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், உடனடியாக, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே, மக்களுக்கு வினியோகிப்பதற்காக வாங்கி வைத்த, "டிவி'க்களை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அதிகாரிகள், அவற்றை இரவோடு இரவாக வினியோகிக்கும் பணியை பல்வேறு இடங்களில் துவக்கினர்.இந்த தகவல் தேர்தல் கமிஷனுக்கும் கிடைத்தது.


இதையடுத்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட அறிவிப்பில், "தேர்தல் நடைமுறைகள்முடியும் வரை, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், இலவச கலர் "டிவி' வினியோகத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அதுபோன்ற வினியோகம் நடந்தது கண்டறியப்பட்டால், அதிகாரிகள் கடும் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என்று எச்சரித்துள்ளார்.


இதேபோல, மற்ற இலவசங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதையும் கண்காணிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. இலவசங்கள் வினியோகத்துக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.


தேர்தல் தேதியை, தலைமைத் தேர்தல் கமிஷனர் அறிவிக்கும் போது குறிப்பிடுகையில், "தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் தங்களது பணியை, பாரபட்சமின்றி, விருப்பு வெறுப்பின்றி மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது. அவர்கள் தற்போது தேர்தல் கமிஷனின் பணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கருதப்பட வேண்டும். தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு, கண்காணிப்பு மற்றும் ஒழுக்கத்தின் கீழ், அவர்கள் கொண்டு வரப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய, அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து அதிகாரிகளின் செயல்பாடுகளும், தேர்தல் கமிஷனின் கண்காணிப்புக்குள் வரும். விதிமீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையினரை, சொந்த மாவட்டங்களில் இருந்து மாற்ற வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதுதவிர, கடந்த நான்கு ஆண்டுகளில், மூன்று ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு மாற்றவும் உத்தரவிட்டிருந்தது.மேலும், இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள், விடுமுறை போன்ற காரணங்களால், கடைசியாக பணியாற்றிய இடங்களில் இருந்தால், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, கோர்ட்டில் ஏதாவது வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தால், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.


இந்த முறை, தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க, மூன்று கட்ட பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமிக்க உள்ளது. பொது பார்வையாளர்கள், தேர்தலின் ஒவ்வொரு கட்டத்தையும் உன்னிப்பாக கவனிப்பர். அவர்களது பணிகள் குறித்து, தேர்தல் கமிஷன் விரிவான அறிவுரைகளை அவர்களுக்கு அளிக்கும்.அடுத்ததாக, செலவுக் கணக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள், தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரின் செலவுகளையும் கண்காணிப்பர். குறிப்பாக, வங்கிகளில் தனியாக கணக்கு துவங்கி, வேட்பாளர்கள் செலவிடும் முறை, தமிழகத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது.இவை தவிர, மைக்ரோ பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, ஓட்டுச்சாவடி அளவில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அவை உரிய இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கப்படும் வரை, இவர்கள் கண்காணிப்பர். பொதுப் பார்வையாளர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இவர்கள் செயல்படுவர்.


நன்றி: தினமலர்