Wednesday, March 2, 2011

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு


சென்னை: நான் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகன். இன்னொரு எம்ஜிஆர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை அதிமுகவும் அதன் தொண்டர்களும் ஏற்கிறார்களா என்று கேட்க விரும்புகிறேன், என்றார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

விஜயகாந்த் - வடிவேலு மோதல் நாடறிந்தது. இந்த மோதலின்போது, சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று நடிகர் வடிவேல் கூறியிருந்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி நடிகர் வடிவேலுவிடம் கேட்கப்பட்டது.

அப்போது வடிவேலு கூறுகையில், நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆரும், கலைஞரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். எம்.ஜி.ஆரின் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். கலைஞரின் அறிவும், ஆற்றலும், அயராத உழைப்பும் எனக்கு பிடிக்கும். அவருடைய நிர்வாக திறன் பிடிக்கும். என்றாலும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்.

இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.

இன்னொரு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அ.தி.மு.க. ஏற்றுக் கொள்கிறதா? அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தபின், விஜயகாந்தை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிடுவேனா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறேன், என்றார்.

விஜயகாந்த்தை அதிமுக கூட்டணி ஏற்றுக் கொண்டது குறித்து தொண்டர்களின் மனதை உலுக்கி எடுக்கும் வகையிலான கேள்வியை வடிவேலு கேட்டுள்ளார். இதற்கு அதிமுக என்ன பதில் சொல்லப் போகிறது என்பது தெரியவில்லை. அதிமுக மேலிடம் பதில் சொல்லாவிட்டாலும் கூட வடிவேலுவின் கேள்விக்கு அதிமுக தொண்டர்கள் என்ன மாதிரியான பதிலை அளிப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு எதிராக திமுக தரப்பிலிருந்து வடிவேலுவை நிறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையிலேயே விஜயகாந்த்தை அதிமுக கூட்டணியில் சேர்த்ததை கேள்வி கேட்டுள்ளார் வடிவேலு என்றும் கருதப்படுகிறது.

-----------------------------

அவராகவேதான் கேள்வி கேட்டுள்ளார். யாரும் எழுதி கொடுத்தெல்லாம் கேட்கவில்லை. இது திருவிளையாடல் வசனம். இத்ற்கும் இந்த செய்திக்கும் சம்பந்தமில்லை

No comments: