வண்டூர் : ரயிலை, ரயில்வே கேட் அருகே நிறுத்தி விட்டு, இன்ஜின் டிரைவர், கறி (இறைச்சி) வாங்க கடைக்குச் சென்று, நீண்ட நேரம் கழித்து திரும்பினார். இதனால், ரயில்வே கேட்டில், நீண்ட நேரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், öஷாரனூருக்கும், மலப்புரம் மாவட்டம் நிலம்பூருக்கும் இடையே, ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இம்மார்க்கத்தில், கடந்த 27ம் தேதி காலை 8.30 மணிக்கு நிலம்பூர்- öஷாரனூர் ரயில், வாணியம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரயில், அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் திடீரென நிறுத்தப்பட்டது. டிரைவர், சாவகாசமாக கீழே இறங்கி, சாலையில் நடந்து சென்றார். அவர் எங்கே போகிறார் என பலருக்கும் தெரியவில்லை. சற்று நேரம் சென்ற அவர், அங்குள்ள மட்டன், சிக்கன் கறி விற்கும் கடைக்குச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், நிறைய வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரயில் டிரைவரும், அவர்களுடன் வரிசையில் நின்று, நீண்ட நேரம் கழித்து, கறி வாங்கிக் கொண்டு திரும்பினார். பின், அவரே பச்சைக் கொடியை காண்பித்து, ரயில் புறப்படுவதற்கான ஒலியையும் எழுப்பி, ரயிலைக் கிளப்பிச் சென்றார். ரயில்வே கேட் பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டதால், அதை கடப்பதற்காக, வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. விடுமுறை தினம் என்பதால், ரயில் பயணிகளும் சிரமப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வாணியம்பலம் ரயில் நிலைய அதிகாரியிடம் கேட்டதற்கு, "சிக்னல் கிடைக்காமல் ரயில் நிறுத்தப்பட்டிருக்கலாம். விபத்து போன்ற ஏதாவது காரணம் இருந்தால் மட்டுமே ரயிலை வழியில் நிறுத்த முடியும். எனினும், இது தொடர்பாக புகார் வந்தால், விசாரணை நடத்தப்படும்' என்றார். ஏற்கனவே, கோழிக்கோடு - காசர்கோடு ரயில் மார்க்கத்தில் ரயில் பயணியொருவர், ஓடும் ரயிலில் இருந்த அபாயச் சங்கிலியை பிடித்திழுத்து ரயிலை நிறுத்தி அருகே உள்ள மதுபான கடைக்குச் சென்று மது வாங்கிக் கொண்டு, "கூலாக' வந்து ரயிலில் ஏறிய சம்பவம், சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது, ரயில் டிரைவரே, ரயிலை நிறுத்தி, கறி வாங்கிய சம்பவம், பொதுமக்களிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
--------
நல்லகாலம் ரயிலை அவர் வீட்டில கொண்டு பார்க் பண்ணாம இருந்தாரே அந்தளவுக்கு சந்தோஷம்.
--------
நல்லகாலம் ரயிலை அவர் வீட்டில கொண்டு பார்க் பண்ணாம இருந்தாரே அந்தளவுக்கு சந்தோஷம்.
No comments:
Post a Comment