Monday, March 7, 2011

விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை முதல் நேர்காணல் - கருணாநிதி

சென்னை: திமுக சார்பில் போட்டியிட விரும்பி விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை முதல் நேர்காணல் தொடங்குகிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நேர்காணல் நடைபெறும்.


திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து திமுக தலைமைக் கழகம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. இன்றுடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைகிறது. இதையடுத்து அறிவாலயத்தில் இன்று பெரும் கூட்டம் அலை மோதி வருகிறது.

இதையடுத்து நாளை முதல் நேர்காணல் தொடங்குகிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்த நேர்காணல் நடைபெறும்.

முதல் நாளான நாளை காலை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தினருக்கும், மாலையில் விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டத்தினருக்கும் நேர்காணல் நடைபெறும்.

மார்ச் 9 - சிவகங்கை, மதுரை புறநகர், மதுரை மாநகர், ஈரோடு (காலை)
நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர் (மாலை)

மார்ச் 10 - புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி (காலை)
கரூர், பெரம்பலூர், அரியலூர் (மாலை)

மார்ச் 11 - நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சை, கடலூர் (காலை)
விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி வடக்கு, தர்மபுரி தெற்கு (மாலை)

மார்ச் 12 - திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் (காலை)
திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை (மாலை)

மார்ச் 13 - புதுச்சேரி மற்றும் காரைக்கால்.

நேர்காணலின்போது வேட்பாளராக விரும்புவோரிடம் பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்படவுள்ளது.

நேர்காணல் குழுவில் முதல்வர் கருணாநிதி தவிர அன்பழகன், மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

No comments: