Showing posts with label கோலிவுட். Show all posts
Showing posts with label கோலிவுட். Show all posts

Monday, March 7, 2011

அனுஷ்கா நீக்கம்

அதிக சம்பளம் கேட்டு அடம்பிடித்ததால் அனுஷ்காவுக்கு வந்த பெரிய பாலிவுட் வாய்ப்பு பறிபோனது.

தமிழில் வெளியான சிங்கம் படம் இப்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்.

சிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அனுஷ்கா. இவரே இந்தியிலும் நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளரும் இயக்குநரும் விரும்பினர்.

ஆனால் இந்திப் படம் என்றதும் தனது சம்பளத்தை ரூ 2 கோடிக்கும் அதிகமாக உயர்த்திக் கேட்டாராம் அனுஷ்கா. இதனால் அவர் வேண்டாம் என முடிவு செய்து, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆனால் இதே அனுஷ்காவுக்கு தமிழில் ரூ 2 கோடி வரை தரத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

----------------
அட தமிழன் தான் வாரி வழங்கும் வள்ளலாச்சே

Friday, March 4, 2011

ஸ்ரேயாவின் 'கண்களைத் திறந்த' பார்வையற்ற தம்பதி!


நடிப்பை பகுதி நேர வேலையாக்கிவிட்டு, ஸ்ரேயா ஆன்மீகம், சமூக சேவை பணிகளில் முழுமையான ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார் ஸ்ரேயா.

வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஜக்கிதான் இவரது சமூக - ஆன்மீக குரு. தினமும் யோகா, தியானத்தில் சில மணி நேரங்களைச் செலவிடும் ஸ்ரேயா, ஏழைகளுக்கு உதவிகளும் செய்கிறாராம்.

தனது இந்த மாற்றம் ஏற்பட்டது குறித்து ஸ்ரேயா இப்படிச் சொல்கிறார்: "சில நாட்களுக்கு முன் பார்வையற்ற கணவன்-மனைவியை பார்த்தேன்.

இருவரும் ஒருவருக்கொருவர் ரொம்ப பாசமாக இருந்தார்கள். அதோடு பிறருக்கு உதவிகளும் செய்து வந்தனர். அவர்களின் நடவடிக்கைகள் என் கண்களை திறந்தன. பார்வையற்ற தம்பதிகளே மற்றவர்களுக்கு இந்த அளவு உதவும் போது, கை, கால், கண் எல்லாம் சரியாக இருக்கும் நாம் ஏன் உதவிகள் செய்யக்கூடாது என்ற எண்ணம் என் மனதை மாற்றிவிட்டது.

அதன் பிறகு நானும் இப்போது முழு நேர சமூக சேவகியாக மாறிவிட்டேனேன். ஒரு அமைப்பு துவங்கி அதன் மூலம் பார்வையற்றோருக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது.

பார்வையற்ற தம்பதியை சந்தித்ததில் இருந்து அழகு பற்றி யோசிப்பதை விட்டு விட்டேன். மனசுதான் உண்மையான அழகு என்பதையும் புரிந்து கொண்டேன்...", என்றார்.

Thursday, March 3, 2011

சிகாகோவில் நம்ம பசங்க

சிகாகோவில் மார்ச் 26ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் சில்பிக்ஸ் சிறார் பட விழாவில் பங்கேற்க பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பட விழா 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.




பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படம் இது. இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். பல்வேறு பட விழாக்களில் பங்கேற்று பல பரிசுகளையும் தட்டி வந்தது.

சீனாவில் நடந்த 19வது கோல்டன் ரூஸ்டர் அன்ட் ஹன்ட்ரட் பிளவர்ஸ் திரைப்பட விழா, வங்கதேசத்தில் நடந்த 2வது சர்வதேச சிறார் திரைப்பட விழா உள்படபல்வேறு விழாக்களில் இது பங்கேற்றுள்ளது.

ஹைதராபாத்தில் நடந்த 16வது சர்வதேச சிறார் திரைப்பட விழாவில் தங்க யானை விருது பெற்றது. சிறந்த இயக்குநருக்கான விருது இதுவாகும்.

அடுத்த கட்டத்தில் பிரகாஷ்ராஜ்

இன்றைய தேதிக்கு 24 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் அநேகமாக பிரகாஷ் ராஜாகத்தான் இருப்பார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என முன்னணி மொழிப் படங்களில் நல்லவராக, வில்லனாக, நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து இந்திப் படம் ஒன்றில் அஜய் தேவ்கனுக்கு வில்லனாக நடிக்கிறார். ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்தப் படம் தமிழில் வெளியான சிங்கம் படத்தின் ரீமேக். ஆனால் இந்திக்கேற்ப க்ளைமாக்ஸ் உள்பட பல விஷயங்களை மாற்றியுள்ளார்களாம்.



தமிழ்ப் படத்திலும் இந்த வேடத்தை பிரகாஷ் ராஜ்தான் செய்திருந்தார். அதில் இவர் பெயர் மயில்வாகனன். இந்தியில் இந்தப் பெயரை மயில்பாய் என்று மாற்றியுள்ளார்களாம். கோவாவில் கட்டப் பஞ்சாயத்து செய்பவராக வருகிறாராம். காஜல் அகர்வால் இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கிறார்.

இதுதவிர இன்னும் இரண்டு இந்திப் படங்களிலும் நடிக்க அட்வான்ஸ் வாங்கியுள்ளாராம் பிரகாஷ் ராஜ்.

கலக்குங்க பிரகாஷ்ராஜ்