சென்னை: பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் ஆற்றில்
குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு
முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன்.
கர்நாடக இசைப் பாடகியான இவர் பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணி
பாடியுள்ளார். இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர்புரம்
பாலத்தில் காரில் வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார்
கூறியுள்ளனர்..
இன்று காலை மகாதேவன் ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் வந்ததாகவும். அங்கு
பாலத்தில் வண்டியைநிறுத்தி விட்டு அடையாறு ஆற்றில் குதித்து விட்டதாகவும்
கூறப்படுகிறது. இதைப் பார்த்த சாலையில் சென்றோர் போலீஸாருக்குத் தகவல்
தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர். நீண்ட
நேர முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலே சிக்கியது. அவரது உடலை சோதனை
செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்று
தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி
இதனிடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன்
நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து
அவரை உறவினர்கள் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த
சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே வேளையில் தினமலரில் வந்துள்ள செய்தியின் தலைப்பைப் பாருங்கள்.
அமாவாசையின் கருத்து: ஏங்க தினமலர் ஐயா புருஷன் போனா பொண்டாட்டி நிற்கதியா?
No comments:
Post a Comment