Thursday, December 20, 2012

அடையாற்றில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி

சென்னை: பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. 
 

 
பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். கர்நாடக இசைப் பாடகியான இவர் பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர்புரம் பாலத்தில் காரில் வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.. இன்று காலை மகாதேவன் ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் வந்ததாகவும். அங்கு பாலத்தில் வண்டியைநிறுத்தி விட்டு அடையாறு ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சாலையில் சென்றோர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர். நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலே சிக்கியது. அவரது உடலை சோதனை செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்று தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி இதனிடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன் நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே வேளையில் தினமலரில் வந்துள்ள செய்தியின் தலைப்பைப் பாருங்கள்.
 
 
அமாவாசையின் கருத்து: ஏங்க தினமலர் ஐயா புருஷன் போனா பொண்டாட்டி நிற்கதியா? 

Thursday, November 22, 2012

பஞ்ச் பரமசிவம்

ெய்ி: கசாபை தூக்கில் போடுவது பிரதமருக்கே தெரியாது; சோனியாவுக்கும் தெரியாது.. சொல்கிறார் ஷிண்டே

 

ஞ்ச்: ங்க அவர் பிரா இருக்கிறே அுக்கத் ெரிய, பின்னெரிஞ்சா என்ன ெரியாட்டா என்ன?

 

 

Tuesday, November 20, 2012

2013-ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு


2013-ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திமுகவை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம்: ராமதாஸ்

சேலம்: திமுகவின் சின்னம் உதயசூரியன். இந்த சூரியன் மேற்கே உதித்தாலும் திமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். திமுகவை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

அப்துல் கசாப்புக்கு தூக்கு

மும்பைத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானை சார்ந்த அப்துல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேயில் தூக்கிலிடப்பட்டான்.


இன்றைய ராசிபலன் - 21.11.2012

விஜயகாந்த் திடீர் ஆலோசனை

அ.தி.மு.க.,விற்கு தாவ தயாராகவுள்ள, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை தக்க வைப்பது குறித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று ரகசிய ஆலோசனை நடத்தினார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் நிலஅதிர்வு

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய கிராமங்களில் . சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டை, புளியங்குடி பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 



இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. ஆலங்குளம்-தென்காசி சாலையில்உள்ள பாவூர்சத்திரத்தில் வி.ஏ.,நகர், கல்லூரணி உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை 4.40 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் பொதுமக்கள் தெருக்களில் கூடி பரபரப்புடன் காணப்பட்டனர்.

'பரதேசி' படத்தின் இசை வெளியீட்டு விழா

பாலா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில், அதர்வா நடிக்கும் 'பரதேசி' படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 25ம் தேதி காலை சத்யம் திரையரங்கில் நடைபெற இருக்கிறது!

'தல' அஜீத்தான் எனக்கு எல்லாம்- சிம்பு பேட்டி!


மிக இயல்பாக பதில் சொல்லும் யங் சூப்பர் ஸ்டார் சிம்பு.




நன்றி: விகடன் வெப்டீவி

காவு கேட்கும் சாதி அரக்கன்! மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள கட்டுரை


"இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே'' என்று நெஞ்சம் கொதித்து எழுதினார் பாரதிதாசன். சாதி அடையாளத்தை சொல்லிக் கொள்வதும் சாதிப் பெயர் கேட்பதும் ஒரு அவமானம் என்ற ஒரு காலம், ஒரு தலைமுறை தமிழகத்தில் இருந்தது.
பெரியார் தன் வாழ்நாள் முழுக்க முன்வைத்துப் போராடிய சாதி மறுப்புத் திருமணங்கள் ஒரு கலாச்சார இயக்கமாக நிகழ்ந்ததும் இதே தமிழகத்தில்தான். கலப்பு மணத்தை சுய மரியாதை திருமணம் என்று மிகப்பெரிய மனித கௌரவமாகக் கொண்டாடிய வரலாறுகளும் இங்குதான் நடந்தன.

இன்று முதல் மீண்டும் வந்திருக்கிறேன்.

இன்று முதல் மீண்டும் வந்திருக்கிறேன்.

குவைத்தில் கொண்டாடப்பட்ட குவைத் பொன்விழா வாணவேடிக்கைக் காட்சிகள். அருமையான வீடியோ.

குவைத் இதில் கின்னஸ் சாதனை படைத்தது.


Tuesday, March 15, 2011

விடுதலைப்புலி ஆதரவு பிரசாரம் குற்றம் ஆகாது; ஐகோர்ட்டு அபார தீர்ப்பு

கருத்துரிமை இயக்கம் சார்பில் புகழேந்தி தங்கராஜ் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் கமிஷனர் அனுமதி தர மறுத்து விட்டார்.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது:-

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரசாரம் செய்வதோ குற்றம் ஆகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. எனவே விடுதலைப்புலிகளின் தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல. அரசியல் சட்டத்துக்கு எதிரானது அல்ல. இதனால் கமிஷனர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

7 அணு உலைகள் நிறுத்தம்: ஜெர்மனி அதிரடி

ஜப்பானில் நில நடுக்கம், சுனாமியால் நிலை குலைந்துள்ளது அதில் அணு உலைகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது. 3 அணு உலைகள் வெடித்ததில் அணு உலைகள் செயலிழந்து அணுக்கதிர் வீச்சு அதிகரித்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து 7 அணு உலைகளின் செயல் பாட்டினை 3 மாதங்களுக்கு நிறுத்துவதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. தலைநகர்  பெர்னிலின் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெர்மனி  அதிபர் ஏன்ஜலா மார்க்கல் ஜெர்மனியில் தற்போது இயங்கி வரும் 17 அணு மின் உலைகளில்,1980 க்கு  முன்னர் செயல்படத்தொடங்கிய அணு மின் உலைகள் 7 தற்காலியமாக நிறுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டிற்குள் அணு உலைகளை அணைத்தையும் நிறுத்த வேண்டும் என்று ஜெர்மனியின் முந்தைய அரசு முடிவு செய்தது.   ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அம் முடிவு மாற்றப்பட்டது. இப்பொழுது ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணுக்கதிர் வீச்சு ஜெர்மனியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து ஜெர்மனியின் மாகான அரசுகளுடன்  பேசிய மார்க்கல் 7 உலைகள் அடுத்து 3 மாதத்திற்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சி அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு

சென்னை: வரும் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் இக்கட்சியின் அகில இந்திய தலைவர் எஸ்.எம்.பாக்கர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட வக்ப் நிலங்கள் மீட்கப்பட்டு, ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும். ஜமாஅத் மூலம் செய்யப்படும் திருமண பதிவு, சட்டப் பதிவு போல ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஜெயலலிதா உத்தரவாதம் அளித்துள்ளார். இக்கோரிக்கைகளின் அடிப்படையில் அ.தி.மு.க.,வுக்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் தி.மு.க.,வும் எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டன.இதனால், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம். முஸ்லிம் வேட்பாளர்கள் எந்த அணியை சேர்ந்தவர்கள் என பார்த்து, அவர்கள் எதிரணி வேட்பாளராக இருந்தால் அவர்களை தோற்கடிக்கவும் பிரசாரம் செய்வோம்.நாங்கள் தனி மேடை அமைத்து அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். அ.தி.மு.க., தனியாக மேடை அமைத்து கொடுத்தால், நாங்கள் அதிலும் தேர்தல் பிரசாரம் செய்வோம். எங்கள் மேடையில் வேட்பாளருக்கு மட்டுமே இடம் இருக்கும்.இவ்வாறு பாக்கர் கூறினார்.