Tuesday, November 20, 2012

அப்துல் கசாப்புக்கு தூக்கு

மும்பைத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானை சார்ந்த அப்துல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேயில் தூக்கிலிடப்பட்டான்.


மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நிராகரித்தார். கசாப்பின் மனுவை, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. பின்னர் இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் கசாப் தரப்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

ஜனாதிபதியின் முடிவைத் தொடர்ந்து ுனேவில் உள்ள எராடா சிறையில் இன்று காலை 7.30க்கூக்கில் இடப்பட்டார்.

அப்ுல் காப் கூறியு: க்கு கைசி ஆசை என்று எுவும் இல்ல.

கசாப்பைத் தூக்கிலிடப் போவது குறித்து பாகிஸ்தானிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. மேலும் அவர்கள் உடலை வாங்க மறுத்து விட்டதால் கசாப்பின் உடல் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

கசாப் தூக்கிலிடப்பட்டது குறித்து அவர் கூறுகையில், எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப் தூக்கிலிடப்பட்டான். அவன் தாக்கல் செய்திருந்த கருணை மனுவை நவம்பர் 5ம் தேதி நிராகரித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

இதையடுத்து கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான கோப்பில் நான் நவம்பர் 6ம் தேதியே கையெழுத்து போட்டு விட்டேன். அது மகாராஷ்டிர அரசுக்கு நவம்பர் 8ம் தேதி சென்று அன்றே அங்கும் கையெழுத்தானது. இதையடுத்து 21ம் தேதி கசாப்பைத் தூக்கிலிடுவது என அன்றே தீர்மானிக்கப்பட்டது.

கசாப்பைத் தூக்கிலிடப் போகிறோம் என்பதை ஏற்கனவே பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவித்து விட்டோம். மேலும் உடலைப் பெற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டு பாகிஸ்தான் தூதரகத்திற்குக் கடிதம் அனுப்பினோம். அதற்கு அவர்கள் பதிலே அனுப்பவில்லை. எனவே கசாப்பின் உடலை இந்தியாவிலேயே முறைப்படி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார் ஷிண்டே.

கசாப் தூக்கிலிடப்பட்ட விவகாரத்தில் ரகசியம் காக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இதுபோன்ற முக்கிய சம்பவங்களில் ரகசியம் காக்கப்படுவதில் தவறில்லை, நியாயமான ஒன்றுதான் என்றார்.
 



No comments: